ஆட்டோமொபைல்
கவாசகி நின்ஜா 300

கவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 முன்பதிவு துவக்கம்

Published On 2021-02-25 06:03 GMT   |   Update On 2021-02-25 06:03 GMT
இந்தியாவில் கவாசகி நிறுவனத்தின் நின்ஜா 300 பிஎஸ்6 மாடல் முன்பதிவு துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

கவாசகி நிறுவன விற்பனையாளர்கள் பிஎஸ்6 நின்ஜா 300 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கின்றனர். புதிய மோட்டார்சைக்கிள் இருவித நிறங்களில் கிடைக்கும் என கவாசகி தெரிவித்து உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட லைம் கிரீன் தவிர, லைம் கிரீன்/எபோனி மற்றும் பிளாக் நிறங்களில் புதிய பிஎஸ்6 நின்ஜா மாடல் கிடைக்கிறது.

புதிய மாடல் தோற்றத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலிலும் ட்வின்-பாட் ஹெட்லைட், மஸ்குலர் பியூவல் டேன்க், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட், குரோம் ஹீட்ஷீல்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



கவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோ-ஷாக், டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் மெக்கானிக்கல் அம்சங்கள் பற்றி கவாசகி இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

எனினும், புதிய மாடலில் பிஎஸ்6 ரக 296சிசி, பேரலெல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் செயல்திறன் முந்தைய மாடலில் இருந்ததை விட வேறுபடும் என கூறப்படுகிறது. பிஎஸ்4 மாடலில் இந்த என்ஜின் 38.4 பிஹெச்பி பவர், 27 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

புதிய மாடலின் விலையும் சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் பிஎஸ்4 மாடல் விலை ரூ. 2.98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 

Tags:    

Similar News