ஆட்டோமொபைல்
2021 பெனலி லியோன்சினோ 500

2021 பெனலி லியோன்சினோ 500 இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-02-19 09:33 GMT   |   Update On 2021-02-19 09:33 GMT
பெனலி நிறுவனத்தின் 2021 லியோன்சினோ 500 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

பெனலி இந்தியா நிறுவனம் 2021 லியோன்சினோ 500 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பெனலி லியோன்சினோ 500 மாடல் விலை ரூ. 4.60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய 2019 வெர்ஷனை விட ரூ. 20 ஆயிரம் குறைவு ஆகும்.

2021 பெனலி லியோன்சினோ 500 மாடலில் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் பெனலி நிறுவனத்தின் மூன்றாவது மோட்டார்சைக்கிள் மாடலாக புதிய லியோன்சினோ 500 அமைகிறது.



முன்னதாக டிஆர்கே 502 மற்றும் இம்பீரியல் 400 உள்ளிட்ட மாடல்கள் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டன. இவைதவிர 2021 ஆண்டில் மேலும் சில பிஎஸ்6 மாடல்களை அறிமுகம் செய்வதாக பெனலி தெரிவித்து இருக்கிறது.

புதிய பெனலி லியோன்சினோ 500 மாடலின் முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இதன் வினியோகம் துவங்கும் என தெரிகிறது.

2021 பெனலி லியோன்சினோ 500 மாடலில் DOHC 500சிசி ட்வின்-சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 46 பிஹெச்பி பவர், 46 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News