ஆட்டோமொபைல்
2021 எம்வி அகுஸ்டா புருடேல் 800 ஆர்ஆர்

2021 எம்வி அகுஸ்டா புருடேல் 800 ஆர்ஆர் மற்றும் டிராக்ஸ்டர் ஆர்ஆர் அறிமுகம்

Published On 2021-02-15 11:22 IST   |   Update On 2021-02-15 11:22:00 IST
எம்வி அகுஸ்டா நிறுவனத்தின் 2021 புருடேல் 800 ஆர்ஆர் மற்றும் டிராக்ஸ்டர் ஆர்ஆர் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டன.


எம்வி அகுஸ்டா நிறுவனம் 2021 புருடேல் 800 ஆர்ஆர் மற்றும் டிராக்ஸ்டர் ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய மேம்பட்ட மாடல்களில் எல்இடி ஹெட்லைட், புது டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மேம்பட்ட ட்ரிபில் எக்சாஸ்ட் அவுட்லெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன் டிராக்ஸ்டர் ஆர்ஆர் மாடலில் பார்-எண்ட் மிரர்கள், பாப்டு டெயில், வயர்-ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இரு மாடல்களில் உள்ள டிஎப்டி டிஸ்ப்ளே ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டு எம்வி ரைடு செயலியுடன் இயங்குகிறது. 



புருடேல் 800 ஆர்ஆர் மாடல் ஷாக் பியல் ரெட் மற்றும் அவியோ கிரே மற்றும் கார்பன் பிளாக் மெட்டாலிக் மற்றும் அவியோ கிரே மெட்டாலிக் நிறங்களில் கிடைக்கிறது. டிராக்ஸ்டர் ஆர்ஆர் மாடல் மேட் மேக்னம் அவியோ கிரே மற்றும் மேட் மெட்டாலிக் டார்க் கிரே மற்றும் மேட் மேக்னம் சில்வர் மற்றும் மேட் மெட்டாலிக் டார்க் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

இரு மாடல்களிலும் 798சிசி, 3 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 138 பிஹெச்பி பவர், 87 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள்கள் மணிக்கு அதிகபட்சம் 244 கிலோமீட்டர் வேகத்தில் சீறி பாயும் திறன் கொண்டுள்ளன.

Similar News