ஆட்டோமொபைல்
யமஹா எம்டி 09

புத்தம் புதிய யமஹா எம்டி 09 அறிமுகம்

Published On 2020-10-29 14:21 IST   |   Update On 2020-10-29 14:21:00 IST
யமஹா நிறுவனத்தின் புத்தம் புதிய எம்டி 09 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.


யமஹா நிறுவனம் தனது 2021 எம்டி 09 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. புதிய மாடல் முந்தைய வெர்ஷனை விட சக்தி வாய்ந்ததாக உருவாகி இருக்கிறது.

அந்த வகையில் புதிய யமஹா எம்டி 09 மாடலில் 889சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது தற்போதைய மாடலில் இருப்பதை விட 42சிசி அதிகம் ஆகும். புதிய என்ஜின் 118 பிஹெச்பி பவர், 93 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.



புதிய என்ஜின் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் மேம்பட்ட பியூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம், புதிய எக்சாஸ்ட் வழங்கப்பட்டு உள்ளது.

யமஹா எம்டி 09 கூர்மையான தோற்றம் கொண்டுள்ளது. இதன் லைட்டிங் முழுக்க எல்இடி யூனிட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய யமஹா எம்டி 09 விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Similar News