ஆட்டோமொபைல்
டிரையம்ப் டைகர் 900

சத்தமின்றி டைகர் 850 ஸ்போர்ட் மாடலை உருவாக்கும் டிரையம்ப்

Published On 2020-10-24 08:15 GMT   |   Update On 2020-10-24 08:15 GMT
டிரையம்ப் நிறுவனம் டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


டிரையம்ப் நிறுவனம் புதிதாக என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிள் பற்றிய விவரங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. எனினும், இந்நிறுவனம் டைகர் 850 ஸ்போர்ட் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய டைகர் 850 ஸ்போர்ட் மாடல் டைகர் 900 மாடலை தழுவி உருவாகிறது. எனினும், இதன் வடிவமைப்பு டைகர் 900 மாடலை விட வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. முன்புறம் பெரிய பேரிங், ட்வின் ஹெட்லேம்ப் செட்டப், பெரிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது.



மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய டைகர் 850 ஸ்போர்ட் மாடலில் டைகர் 900 மாடலில் வழங்கப்பட்ட என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. அந்த வகையில் இந்த என்ஜின் 94 பிஹெச்பி பவரை 8750 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது. 

அறிமுகமானதும் புதிய டைகர் 850 ஸ்போர்ட் மாடல் பிஎம்டபிள்யூ எப்900எக்ஸ்ஆர் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. இதுவரை டைகர் ஸ்போர்ட் பிராண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை.
Tags:    

Similar News