பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது அவென்ஜர் மோட்டார்சைக்கிள் சீரிஸ் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது.
அவென்ஜர் சீரிஸ் மாடல்களின் விலையை திடீரென உயர்த்திய பஜாஜ் ஆட்டோ
பதிவு: அக்டோபர் 08, 2020 16:01
அவென்ஜர் ஸ்டிரீட் 160
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அவென்ஜர் சீரிஸ் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. முன்னதாக டாமினர் மற்றும் பல்சர் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்பின் படி அவென்ஜர் ஸ்டிரீட் 160 மற்றும் குரூயிஸ் 220 பிஎஸ்6 மாடல்கள் முறையே ரூ. 1,01,094 மற்றும் ரூ. 1,22,630 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களுக்கும் இம்முறை ரூ. 1,497 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் கிடைக்கும் சிறிய மற்றும் விலை குறைந்த குரூயிசர் மாடல்களாக பஜாஜ் அவென்ஜர் இருக்கின்றன. இதன் ஸ்டிரீட் மாடலில் 160சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 14.79 பிஹெச்பி பவர், 13.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
அவென்ஜர் குரூயிஸ் 220 மாடலில் 220சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 18.76 பிஹெச்பி பவர், 17.55 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
Related Tags :