ஆட்டோமொபைல்
பேட்ரீ GPS ie

குறைந்த விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-05-23 09:21 GMT   |   Update On 2020-05-23 09:21 GMT
பேட்ரீ நிறுவனம் குறைந்த விலையில், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
  


எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் பேட்ரீ நிறுவனம் இந்தியாவில் gps:ie என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய gps:ie இ ஸ்கூட்டர் விலை ரூ. 64,990, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைக்கு முதல் வருடத்திற்கான சந்தாவும் அடங்கும்.

இரண்டாவது ஆண்டு முதல் வாடிக்கையாளர்கள் ரூ. 1200 வருடாந்திர சந்தாவை செலுத்த வேண்டும். கனெக்ட்டெட் ஸ்கூட்டர் அனுபவத்தை வழங்க பேட்ரீ நிறுவனம் ஏரிஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்த ஸ்கூட்டர்ல சிம் கார்டு பயன்படுத்துகிறது. இதனை ஸ்மார்ட்போன் செயலி மூலம் இயக்க முடியும்.



பேட்ரீ நிறுவனத்தின் gps:ie மாடலில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஜிபிஎஸ் டிராக்கிங், ரிமோட் இம்மொபைலைசேஷன், டிரைவர் ரிப்போர்ட், ட்ரிப் ரிப்போர்ட், செக்யூர் பார்க், ஜியோஃபென்ஸ் மற்றும் டிவைஸ் மேனேஜ்மென்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்கூட்டர் 48 வோல்ட் 24AH லித்தியம் ஃபெரோ போஸ்பேட் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது மணிக்கு அதிகபட்சமாக மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனை சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்கள் ஆகும். இந்த ஸ்கூட்டரின் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News