ஆட்டோமொபைல்
பிஎம் டபிள்யூ எஃப் 900 ஆர் மற்றும் பிஎம்டபிள்யூ எஃப் 900 எக்ஸ்ஆர்

இந்திய சந்தையில் இரு பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்

Published On 2020-05-22 09:43 GMT   |   Update On 2020-05-22 09:43 GMT
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் எஃப் 900 ஆர் மற்றும் எஃப் 900 எக்ஸ்ஆர் என இரு மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எஃப் 900 ஆர் மாடல் நேக்கட் ரோட்ஸ்டர் ஆகும். மற்றொரு மாடலான பிஎம்டபிள்யூ எஃப் 900 எக்ஸ்ஆர் அட்வென்ச்சர் ஸ்போர்ட் டூரர் மாடல் ஆகும். இரு மாடல்களின் விலை முறையே ரூ. 9.90 லட்சம் மற்றும் ரூ. 10.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இத்துடன் பிஎம்டபிள்யூ எஃப் 900 எக்ஸ்ஆர் மாடல் ஸ்டான்டர்டு மற்றும் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



பிஎம்டபிள்யூ எஃப் 900 ஆர் மாடல் கேடிஎம் 790 டியூக் மற்றும் டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர்எஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. பிஎம்டபிள்யூ எஃப் 900 எக்ஸ்ஆர் மாடல் டுகாட்டி மல்டிஸ்டிராடா 950 மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் டிரையம்ப் டைகர் 900 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இரு மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவுகளை துவங்கியள்ளது. இரு மாடல்களும் இந்தியாவில் சிபியு முறையில் இறக்குமதி செய்யப்படுகிறது.
Tags:    

Similar News