ஆட்டோமொபைல்
யமஹா இசட்ஆர் 125 எஃப்ஐ

இந்தியாவில் இரு யமஹா ஸ்கூட்டர்களின் விலை திடீர் உயர்வு

Published On 2020-05-21 06:57 GMT   |   Update On 2020-05-21 06:57 GMT
யமஹா நிறுவனம் தனது இரு ஸ்கூட்டர் மாடல்களின் விலையை இந்தியாவில் மாற்றியமைத்துள்ளது. புதிய விலை விவரங்களை பார்ப்போம்.



யமஹா நிறுவனம் பிஎஸ்6 ரே இசட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் பிஎஸ்6 யமஹா ரே இசட்ஆர் ஸ்டிரீட் ரேலி 125 எஃப்ஐ ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்தது. வெளியீட்டின் போது இரு மாடல்களின் விலை முறையே ரூ. 66,730 மற்றும் ரூ. 70,730 என நிர்ணயம் செய்யப்பட்டது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்சமயம் யமஹா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இரு ஸ்கூட்டர் மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. தற்சமயம் ரே இசட்ஆர் 125 எஃப்ஐ டிரம் மாடல் விலை ரூ. 67,530 என்றும் ரே இசட்ஆர் 125 எஃப்ஐ டிஸ்க் மாடல் ரூ. 70,530 என்றும் ரே இசட்ஆர் 125 எஃப்ஐ மாடலின் விலை ரூ. 71,530 என மாற்றப்பட்டுள்ளது. 



அதன்படி மூன்று மாடல்களின் விலையும் ரூ. 800 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக யமஹா ஆர்15 பிஎஸ்6 மாடல், யமஹா எஃப்இசட் எஃப்ஐ பிஎஸ்6, யமஹா எஃப்இசட்எஸ் எஃப்ஐ பிஎஸ்6 மற்றும் யமஹா எம்டி 15 பிஎஸ்6 மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்6 யமஹா ரே இசட்ஆர் 125 எஃப்ஐ டிரம் பிரேக் மாடல் மெட்டாலிக் பிளாக் மற்றும் சியான் புளூ என இரு நிறங்களிலும், டிஸ்க் பிரேக் மாடல் - டார்க் மேட் புளூ, ரெடிஷ் எல்லோ காக்டெயில், மேட் ரெட் மெட்டாலிக், மெட்டாலிக் பிளாக் மற்றும் சியான் புளூ என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. 

யமஹா ரே இசட்ஆர் ஸ்டிரீட் ரேலி 125 எஃப்ஐ மாடல் ஸ்பார்க்கிள் கிரீன் மற்றும் பர்ப்ளிஷ் புளூ மெட்டாலிக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News