ஆட்டோமொபைல்
கவாசகி வெர்சிஸ் 1000

இந்தியாவில் கவாசகி வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Published On 2020-05-19 09:19 GMT   |   Update On 2020-05-19 09:19 GMT
கவாசகி நிறுவனத்தின் புதிய வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



கவாசகி இந்தியா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய டூரிங் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 10.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய பிஎஸ்4 மாடலின் விலையை விட ரூ. 10 ஆயிரம் அதிகம் ஆகும்.

புதிய பிஎஸ்6 என்ஜின் தவிர மோட்டார்சைக்கிள் தோற்றத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இத்துடன் புதிய அம்சங்களும் வழங்கப்படவில்லை. 2020 வெர்சிஸ் 1000 மாடலில் டூயல் டோன்- பியல் ஸ்டார்டஸ்ட் வைட் / மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக், கேண்டி லைம் கிரீன்  / மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.



கவாசகி வெர்சிஸ் 1000 மாடலில் பிஎஸ்6 ரக 1043 சிசி லிக்விட் கூல்டு, இன் லைன் நான்கு சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 118 பிஹெச்பி பவர், 102 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

இதே என்ஜின் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிஞ்சா 1000 பிஎஸ்6 மாடலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெர்சிஸ் மாடலில் இந்த என்ஜின் அதிக செயல்திறன் வழங்கும் வகையில் டியூன்  செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News