ஆட்டோமொபைல்
ஹோண்டா டியோ பிஎஸ்6

மூன்று மாதங்களில் மாற்றப்பட்ட டியோ பிஎஸ்6 விலை

Published On 2020-05-09 14:49 IST   |   Update On 2020-05-09 14:50:00 IST
ஹோண்டா நிறுவனத்தின் டியோ பிஎஸ்6 ஸ்கூட்டர் விலை வெளியான மூன்று மாதங்களில் மாற்றப்பட்டுள்ளது.



ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் டியோ பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடலின் விலையை மாற்றியுள்ளது. எனினும், டியோ பிஎஸ்6 இரு வேரியண்ட்களின் விலையில் ரூ. 552 உயர்த்தப்பட்டுள்ளது.

ஹோண்டா டியோ எஸ்டிடி மற்றும் டிஎல்எக்ஸ் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் புதிய விலை முறையே ரூ. 60,542
 மற்றும் ரூ. 63,892 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டியோ பிஎஸ்6 இந்தியாவில் வெளியான மூன்றே மாதங்களில் இதன் விலை மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



முன்னதாக ஹோண்டா டியோ பிஎஸ்6 மாடல்கள் அதன் பிஎஸ்4 மாடல்களை விட ரூ. 5476 மற்றும் ரூ. 7099 வரை விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டது. பி.எஸ்.6 ஹோண்டா டியோ மாடல்களில் புதிய வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

புதிய டியோ பி.எஸ்.6 ஸ்கூட்டரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது ட்ரிப் மீட்டர், கடிகாரம் மற்றும் சர்வீஸ் இன்டிகேட்டர் உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கிறது. மேலும் இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது.

Similar News