ஆட்டோமொபைல்
டெமோன் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்

சர்வதேச சந்தையில் இரு ஹைப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்

Published On 2020-05-07 09:29 GMT   |   Update On 2020-05-07 09:29 GMT
கனடாவை சேர்ந்த டெமோன் பேட்டரி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இரண்டு ஹைப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.



பேட்டரியில் ஓடும் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டெமோன் நிறுவனம் இரண்டு மாடல்களில் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இவை டெமோன் ஹைபர்ஸ்போர்ட் ஆர்க்டிக்சன் மற்றும் மிட்நைட் சன் என அழைக்கப்படுகின்றன.

இதில் கோ-பைலட் சிஸ்டம் என்ற தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இதை ஆன் செய்தால் மோட்டார்சைக்கிளை சுற்றி 360 டிகிரி கோணத்தில் அனைத்து விஷயங்களையும் ஸ்கேன் செய்து பிற வாகன ஓட்டிகளால் இந்த மோட்டார் சைக்கிளை ஓட்டுபவருக்கு ஆபத்து ஏற்படுமாயின் அது குறித்து எச்சரிக்கை செய்யும்.



இதில் உள்ள ஷிப்ட் தொழில்நுட்பம் மூலம் வாகனம் ஓட்டும் நிலையை விருப்பம்போல மாற்றிக்கொள்ள முடியும். இந்த இரண்டு மாடலுமே 200 ஹெச்.பி. திறன் 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. இதனால் 100 கி.மீ. வேகத்தை 3 விநாடிகளில் எட்டி விட முடியும். 

இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 322 கி.மீ. ஆகும். இதில் உள்ள பேட்டரி முழுமையாக 3 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிவிடும். கனடாவைச் சேர்ந்த நிறுவனம் விரைவிலேயே சாகச பயணங்களுக்கான பேட்டரி மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
Tags:    

Similar News