ஆட்டோமொபைல்
ஜாவா 300

ஜாவா 300 மாடல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் திட்டம்

Published On 2020-04-25 09:47 GMT   |   Update On 2020-04-25 09:47 GMT
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ஜாவா 300 மாடல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது ஜாவா 300 மோட்டார்சைக்கிள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. ஜாவா 300 மாடல் இந்தியாவில் 2018 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது. முதன் முதலில் ஜாவா மோட்டார்சைக்கிள் செக் குடியரசு நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஜாவா 300 மாடலின் வெளிப்புறம் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், இதன் என்ஜின் பாகங்கள் மட்டும் ஐரோப்பிய தரத்துக்கு ஏற்றவாரு மாற்றப்பட்டு இருக்கிறது. ஜாவா பிராண்டு மோட்டார்சைக்கிள்களை மஹிந்திரா நிறுவனம் மறுகட்டமைப்பு செய்து இந்தியாவில் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.



2018 ஆம் ஆண்டு முதல் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இதுவரை ஜாவா 300 மற்றும் ஜாவா ஃபார்டி டூ என இரண்டு மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. 

ஜாவா 300 மோட்டார்சைக்கிளில் 293 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

கடந்த மாதம் ஜாவா 300 மோட்டார்சைக்கிள் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டது. மேலும் கிராஸ் போர்ட் தொழில்நுட்பம் கொண்ட முதல் மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்றது.
Tags:    

Similar News