ஆட்டோமொபைல்
பஜாஜ் பிளாட்டினா ஹெச் கியர்

பஜாஜ் பிளாட்டினா ஹெச் கியர் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-04-24 09:54 GMT   |   Update On 2020-04-24 09:54 GMT
பஜாஜ் நிறுவனத்தின் பிளாட்டினா ஹெச் கியர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பிளாட்டினா ஹெச் கியர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய பஜாஜ் பிளாட்டினா ஹெச் கியர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 59,802, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்6 பஜாஜ் பிளாட்டினா ஹெச் கியர் பிஎஸ்6 மாடல் ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது. புதிய பிஎஸ்6 என்ஜின் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. பிளாட்டினா ஹெச் கியர் பிஎஸ்6 மாடலில் தற்சமயம் 115.45சிசி சிங்கிள் சிலிண்ட் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.



இந்த என்ஜின் 8 பிஹெச்பி பவர், 9.81 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பிளாட்டினா மாடலில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இது மோட்டார்சைக்கிள் செயல்திறனை அதிகப்படுத்துகிறது. 

மேம்பட்ட என்ஜின் தவிர இந்த மோட்டார்சைக்கிளின் பெரும்பாலான அம்சங்கள் மாற்றப்படவில்லை. பஜாஜ் பிளாட்டினா ஹெச் கியர் பிஎஸ்6 மாடல் 2006 எம்எம் நீளமாகவும், 713 எம்எம் அகலம் மற்றும் 1100 எம்எம் உயரமாக இருக்கிறது. இந்த மோட்டாக்சைக்கிள் எடை 122 கிலோ ஆகும். 

புதிய பிஎஸ்6 பஜாஜ் பிளாட்டினா ஹெச் கியர் மாடலில் முந்தைய மாடலில் இருந்ததை போன்ற கிராஃபிக்ஸ், பிளாக்டு-அவுட் என்ஜின், எக்சாஸ்ட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அலாய் வீல், ஹாலோஜென் ஹெட்லேம்ப் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News