ஆட்டோமொபைல்
ஹோண்டா ஆக்டிவா 125

இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா 125 விலை மாற்றம்

Published On 2020-04-16 09:43 GMT   |   Update On 2020-04-16 09:43 GMT
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஆக்டிவா 125 மாடலின் விலையை சத்தமில்லாமல் மாற்றியிருக்கிறது.



ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஆக்டிவா 125 சிசி ஸ்கூட்டர் விலையை உயர்த்தி இருக்கிறது. அந்த வகையில் ஹோண்டா ஆக்டிவா 125 மாடல் விலை ரூ. 68,042 இல் இருந்து ரூ. 75,042 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆக்டா 125 மூன்று வேரியண்ட்களின் விலையும் ரூ. 7 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆக்டிவா 125 ஸ்கூட்டர் தான் ஹோண்டா நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 வாகனம் ஆகும். இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.  ஹோன்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன. 



ஸ்கூட்டரின் முன்புறம் சற்று மாற்றப்பட்டு, எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய மாற்றங்கள் ஸ்கூட்டருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. ஆக்டிவா 125 பிஎஸ் 6 மாடலில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. 

உபகரணங்களை பொருத்தவரை ஆக்டிவா 125 மாடலில் வெளிப்புறம் ஃபியூயல் ஃபில்லிங் கேப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சைலன்ட் ஸ்டார்ட், குளோவ் பாக்ஸ், சைடு-ஸ்டான்டு சென்சார், எல்இடி லைட்டிங், அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸடர் வழங்கப்பட்டுள்ளது.

இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் முன்பை விட கூடுதல் விவரங்களை காண்பிக்கிறது. இத்துடன் சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டரும் இடம்பெற்றிருக்கிறது. புதிய ஹோன்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் 124சிசி சிங்கிள் சிலிண்டர் ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News