ஆட்டோமொபைல்
ஹீரோ மோட்டோகார்ப் மொபைல் ஆம்புலன்ஸ்

நாடு முழுக்க 60 மொபைல் ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கிய ஹீரோ மோட்டோகார்ப்

Published On 2020-04-15 09:11 GMT   |   Update On 2020-04-15 09:11 GMT
கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக பயன்படுத்த நாடு முழுக்க 60 மொபைல் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வழங்கி இருக்கிறது.



உலகின் முன்னணி இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், நாடு முழுக்க பயன்படுத்த 60 மொபைல் ஆம்புலன்ஸ் வாகனங்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறது. நாடு முழுக்க பல்வேறு அரசு அதிகாரிகளிடம் மொபைல் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 150சிசி மற்றும் அதற்கும் அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களே மொபைல் ஆம்புலன்ஸ் ஆக மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மோட்டார்சைக்கிள்களில் தேவையான அனைத்து விதமான உபகரணங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.



இவற்றில் படுக்கை வசதி, அடிப்படை மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர், முதலுதவி பெட்டி, தீ அணைப்பான் மற்றும் சைரென் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

மொபைல் ஆம்புலன்ஸ் கொண்டு ஊரக பகுதிகளில் வசிக்கும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. மேலும் மொபைல் ஆம்புலன்ஸ் கொண்டு நோயாளிகளை அருகாமையில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவும் பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசுக்கு ஹீரோ குழுமம் சார்பில் ரூ. 100 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News