ஆட்டோமொபைல்
ராயல் என்ஃபீல்டு புல்லட்

ராயல் என்ஃபீல்டு வாகனங்களுக்கு இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி நீட்டிப்பு

Published On 2020-04-13 10:20 GMT   |   Update On 2020-04-13 10:20 GMT
ராயல் என்ஃபீல்டு நிறுவன வாகனங்களுக்கு இலவச சர்ஸீவ் மற்றும் வாரண்டி சலுகை இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



சென்னையை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு தனது வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்ட இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகை இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. சேவை நீட்டிப்பு பற்றி வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் ராயல் என்ஃபீல்டு விற்பனையகங்கள் மற்றும் ரோட்சைடு அசிஸ்டண்ஸ் மற்றும் டோர்ஸ்டெப் சர்வீஸ் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இலவச சர்வீஸ் போன்ற சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.



இத்தனை சேவைகள் பாதிக்கப்பட்டு இருப்பதால், மார்ச் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரையிலான காலக்கட்டத்தில் நிறைவுற்ற இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி உள்ளிட்டவை இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஊரடங்கு நிறைவுற்றதும் வாகனத்தை சீராக வைத்துக் கொள்வதற்கான அறிவுரைகளையும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோட்டார்சைக்கிள்கள் சென்டர் ஸ்டான்டு போடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அவை உறுதியான நிலப்பரப்பில் நிறுத்தப்பட
 வேண்டும் என ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. மேலும் வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்திவைக்கப்படாமல், குறைந்த பட்சம் 2.5 மீட்டர்கள் அளவு முன்பும் பின்பும் அசைக்கப்பட வேண்டும். 

இவ்வாறு செய்யும் போது முன்புறம் மற்றும் பின்பக்க பிரேக்குகளை மென்மையாக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இத்துடன் மோட்டார்சைக்கிள் அடிக்கடி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை இயக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பேட்டரி சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இருக்கும்.
Tags:    

Similar News