ஆட்டோமொபைல்
ஹார்லி டேவிட்சன் லோ ரைடர் எஸ்

2020 ஹார்லி டேவிட்சன் லோ ரைடர் எஸ் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Published On 2020-04-07 10:26 GMT   |   Update On 2020-04-07 10:26 GMT
2020 ஹார்லி டேவிட்சசன் லோ ரைடர் எஸ் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 2020 லோ ரைடர் எஸ் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹார்லி டேவிட்சன் லோ ரைடர் எஸ் மாடலின் துவக்க விலை ரூ. 14.69 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய 2020 ஹார்லி டேவிட்சன் லோ ரைடர் எஸ் மாடல்- பரக்குடா சில்வர் மற்றும் விவிட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. தற்சமயம் விவட் பிளாக் வேரியண்ட் விலை மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் பரக்குடா வேரியண்ட் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.



லோ ரைடர் எஸ் மாடலில் 1868சிசி மில்வாக்கி எய்ட் 114 வி ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 161 என்எம் டார்க்கினை 3000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தக்கூடிய திறன் கொண்டது ஆகும். சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 43 எம்எம் யுஎஸ்டி ஃபோர்க், ட்வின் டிஸ்க் பிரேக்கிங் வழங்கப்பட்டுள்ளது. 

இதன் முன்புறம் 19 இன்ச் டையர்கள் 110/90 ப்ரோஃபைலிலும், பின்புறம் 180/70 ப்ரோஃபைலில் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் எடை 308 கிலோ ஆகும்.

முன்னதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 1200 கஸ்டம் 2020 மாடல் மற்றும் ஃபாட் பாய் என இரண்டு மாடல்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களின் விலை ரூ. 10.77 மற்றும் ரூ. 18.25 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
Tags:    

Similar News