ஆட்டோமொபைல்
பிஎஸ்6 ஸ்கூட்டி பெப் பிளஸ்

இந்தியாவில் பிஎஸ்6 ஸ்கூட்டி பெப் பிளஸ் அறிமுகம்

Published On 2020-04-04 07:19 GMT   |   Update On 2020-04-04 07:19 GMT
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் பிஎஸ்6 ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்கூட்டி பெப் பிளஸ் பிஎஸ்6 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் துவக்க விலை ரூ. 51,754, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டர் தொடர்ந்து ஸ்கூட்டி பெப் பிளஸ் சீரிஸ், பேபிலிசியஸ் சீரிஸ் மற்றும் மேட் எடிஷன் சீரிஸ் உள்ளிட்டவற்றில் கிடைக்கிறது.

புதிய ஸ்கூட்டி மாடல் பற்றி டிவிஎஸ் மோட்டார்ஸ் அதிக விவரங்களை வழங்கவில்லை. புதிய பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலை முந்தைய மாடல்களை விட ரூ. 6400 மற்றும் ரூ. 6700 வரை அதிகம் ஆகும். இதில் சிறிதளவு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதன் செயல்திறன் மற்றும் இதர விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும் பிஎஸ்6 விதிகளின் கீழ் என்ஜின் செயல்திறன் அளவுகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போதைய பிஎஸ்4 மாடலில் உள்ள 87.8சிசி என்ஜின் 5 பிஹெச்பி பவர், 6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

புதிய பிஎஸ்6 மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள், ஸ்மார்ட்போன் சார்ஜர், கிக் ஸ்டாண்ட் அலாரம், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரு சக்கரங்களிலும் 110 எம்எம் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒன்பது வித்தியாசமான நிறங்களில் கிடைக்கும் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் பிஎஸ்6 மாடல்களின் துவக்க விலை ரூ. 51754 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 52954 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News