ஆட்டோமொபைல்
ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம்

இந்தியாவில் புதிய ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Published On 2020-03-30 10:20 GMT   |   Update On 2020-03-30 10:20 GMT
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 1200 கஸ்டம் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.



ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது 2020 கஸ்டம் மாடல் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் துவக்க விலை ரூ. 10.77 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மாடல் பாரம்பரிய தோற்றத்தில், ஹெட்லேம்ப் மற்றும் சிக்னல் இன்டிகேட்டர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் எக்ஸ்போஸ்டு என்ஜின், பார்ட்-டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது லோ ஃபியூயல் வார்னிங், ஒடோமீட்டர், டைம் ஆஃப் டே கிளாக், டூயல் ட்ரிப் மோட்டார்கள், லோ ஆயில் பிரெஷர் லைட் உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கிறது.



புதிய மாடலில் பி.எஸ்.6 ரக 1200 சிசி ஏர் கூல்டு எவல்யூஷன் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 97 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் ஏர் கிளீனர் கவர்கள், ஆல் குரோம் ஷார்ட்டி டூயல் டேம்ப்பர்டு எக்சாஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் கன்வென்ஷனல் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் டூயல் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக்குகளும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஹார்லி நிறுவன அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி புதிய மோட்டார்சைக்கிள் மிட்நைட் புளூ, ரிவர் ராக் கிரே, பில்லார்ட் ரெட் மற்றும் விவிட் பிளாக், ரிவர் ராக் கிரே மற்றும் விவிட் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News