ஆட்டோமொபைல்
2020 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர்.எஸ்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டிரையம்ப் மோட்டார்சைக்கிள் வெளியீடு ஒத்திவைப்பு

Published On 2020-03-24 09:59 GMT   |   Update On 2020-03-24 09:59 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து இருப்பதால் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.



டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2020 ஸ்டிரீட் டிரிபில் ஆர்.எஸ். மோட்டார்சைக்கிள் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை மார்ச் 25 ஆம் தேதி துவங்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளியீட்டு ஒத்திவைக்கப்படுவதாக டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து இருக்கிறது. 

நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து இருப்பதால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. புதிய வெளியீட்டு தேதி மார்ச் 31-க்கு பின் அறிவிக்கப்படும் என டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் தெரிவித்து இருக்கிறது. 



புதிய ஸ்டிரீட் டிரிபில் ஆர்.எஸ். மாடல் முந்தைய ஆர்.எஸ். மாடலுடன் ஒப்பிடும் போது அதிகளவு மாற்றங்களை கொண்டிருக்கிறது. தோற்றத்தில் முந்தைய மாடல் போல் காட்சியளித்தாலும், இதில் புதிய எல்.இ.டி. டெயில் லேம்ப், இன்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகின்றன. 

புதிய ஹெட்லேம்ப்கள் தவிர இந்த மோட்டார்சைக்கிளின் பாடி பேனல்களும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய மாடலில் முந்தைய வெர்ஷன்களில் உள்ளதை போன்றே பெரிய டி.எஃப்.டி. ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. எனினும், இதில் புதிய கிராஃபிக்ஸ், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, கோ-ப்ரோ கண்ட்ரோல்கள் உள்ளிட்டவை அக்சஸரி சிப் மூலம் எனேபிள் செய்யப்படுகிறது.

புதிய மோட்டார்சைக்கிளில் 765சிசி, லிக்விட் கூல்டு, இன் லைன் டிரிபில் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 123 பி.ஹெச்.பி. பவர், 79 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அப்/டவுன் குவிக்‌ஷிஃப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் தற்போதைய டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர்.எஸ். மாடல் விலை ரூ. 11.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய மாடல் விலை விரைவில் தெரியவரும்.
Tags:    

Similar News