ஆட்டோமொபைல்
ஹோண்டா ரிபெல் 500

விரைவில் இந்தியா வரும் ஹோண்டா 500 சிசி மோட்டார்சைக்கிள்

Published On 2020-03-16 06:53 GMT   |   Update On 2020-03-16 06:53 GMT
ஹோண்டா நிறுவனத்தின் புதிய 500சிசி மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



ஹோண்டா நிறுவனம் விரைவில் ரிபெல் 500 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஹோண்டா நிறுவனத்தின் ஒற்றை குரூயிசர் மாடல் ஆகும். ரிபெல் 300 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகமாக இருக்கும் ரிபெல் 500 2019 EICMA விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.

புதிய மாடல் ஹோண்டா வெளியிட திட்டமிட்டு இருக்கும் சி.பி.ஆர்.500ஆர், சி.பி.500எஃப் மற்றும் சி.பி.500எக்ஸ் போன்ற 500சிசி மாடல்களில் ஒன்றாகும். இந்த மோட்டார்சைக்கிள் மொத்தம் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.

ஹோண்டா ரிபெல் 500 மாடலில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், எல்.இ.டி. லைட்டிங் இன்டிகேட்டர், பின்புறம் சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வட்ட வடிவம் கொண்டிருக்கிறது. ஸ்ப்லிட் சீட் இருக்கை கொண்டிருக்கும் ரிபெல் 500 மாடலில் ரைடர் சீட் 690 எம்.எம். உயரத்தில் இருக்கிறது.



ரிபெல் 500 மாடலில் 471சிசி 4 வால்வ், லிக்விட் கூல்டு பேரலெல் ட்வின், 4 ஸ்டிரோக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது 46.2பி.எஸ். பவர், 43.3 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் இருபுறங்களிலும் 16 இன்ச் வீல்கள் வழங்கப்படுகின்றன.

சஸ்பென்ஷெனிற்கு முன்புறம் 41 எம்.எம். கன்வென்ஷனல் ஃபோர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. 185 கிலோ எடை கொண்டிருக்கும் ஹோண்டா ரிபெல் 500 மாடலின் வீல்பேஸ் 1490 எம்.எம். ஆகும்.

இந்தியாவில் ஹோண்டா ரிபெல் 500 மாடலின் விலை ரூ. 4.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த மாடல் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது.
Tags:    

Similar News