ஆட்டோமொபைல்
2020 ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின்

இந்தியாவில் 2020 ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Published On 2020-03-06 07:37 GMT   |   Update On 2020-03-06 07:37 GMT
ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2020 CRF1100L ஆஃப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2020 CRF1100L ஆஃப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய 2020 ஆஃப்ரிக்கா ட்வின் மாடலின் துவக்க விலை ரூ. 15.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மாடலில் பல்வேறு எலெக்டிரிக்கல் மற்றும் கனெக்ட்டெட் தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2020 ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் மாடல்: ஸ்டான்டர்டு மற்றும் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு வேரியண்ட்களிலும் 1084 சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் ப்ரோடெக்டிவ் ஃபிரேம்வொர்க், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன், பெரிய ஃபியூயல் டேன்க், டியூப்லெஸ் டையர் மற்றும் என்ஜின் பேஷ் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



ஸ்டான்டர்டு அம்சங்களை பொருத்தவரை இரு வேரியண்ட்களிலும் 6.5 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் ஆப்பிள் கார்பிளே உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹோண்டா செலக்டபில் டிராக்‌ஷன் கண்ட்ரோல், 6 ஆக்சிஸ் இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட், மூன்று நிலைகளில் வீலி கண்ட்ரோல் சிஸ்டம், கார்னெரிங் லைட்கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. 

2020 ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் மாடலில் நான்கு நிலைகளில் என்ஜின் செயல்திறன் மற்றும் மூன்று நிலைகளில் எலெக்டிரானிக் என்ஜின் பிரேக்கிங் வழங்கப்பட்டுள்ளன. 2020 ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் 1084 சிசி பேரலெல் ட்வின் என்ஜின் 101 பி.ஹெச்.பி. @7500 ஆர்.பி.எம்., 105 என்.எம். டார்க் @6250 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மேனுவல் அல்லது டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News