ஆட்டோமொபைல்
டாமினர் 400

விரைவில் இந்தியா வரும் டாமினர் 250

Published On 2020-03-03 06:43 GMT   |   Update On 2020-03-03 06:43 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 250 இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய டாமினர் 250 மோட்டார்சைக்கிள் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் டாமினர் 250 சிசி மோட்டார்சைக்கிள் கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்படுகிறது. பலமுறை இவற்றின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. புதிய டாமினர் 250 சிசி மோட்டார்சைக்கிளில் கே.டி.எம். டியூக் 250 மாடலி்ல் உள்ள பவர் யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் புதிய டாமினர் மாடலில் 249சிசி சிங்கிள் சிலிணடர் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 30 பி.ஹெச்.பி. பவர், 24 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. எனினும், டாமினர் 250 மாடலில் இந்த என்ஜின் டி-டியூன் செய்யப்படும் என கூறப்படுகிறது.



புதிய பஜாஜ் டாமினர் இந்திய விலை ரூ. 1.45 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.55 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சமீபத்தில் பஜாஜ் நிறுவனம் பல்சர் 150 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றின் துவக்க விலை ரூ. 94,956 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்சர் 150 மாடல்- பல்சர் 150 மற்றும் பல்சர் 150 ட்வின் டிஸ்க் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் புதிய ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக செயல்திறன் மற்றும் சிறப்பான எரிபொருள் பயன்பாட்டினை வழங்குகிறது.
Tags:    

Similar News