ஆட்டோமொபைல்
சூப்பர் ஸ்பிலென்டர் பி.எஸ்.6

இந்தியாவில் சூப்பர் ஸ்பிலென்டர் பி.எஸ்.6 வெளியானது

Published On 2020-02-29 08:15 GMT   |   Update On 2020-02-29 06:27 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் சூப்பர் ஸ்பிலென்டர் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை வெளியிட்டுள்ளது.



ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் ஹீரோ சூப்பர் ஸ்பிலென்டர் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 67,300 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய சூப்பர் ஸ்பிலென்டர் பி.எஸ்.6 மாடலில் புதிய 125சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 10.73 பி.ஹெச்.பி. பவர், 10.6 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதில் புரோகிராம் செய்யப்பட்ட ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் மற்றும் எக்ஸ் சென்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது பி.எஸ்.4 மாடல்களை விட 19 சதவீதம் கூடுதல் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் பி.எஸ்.6 சூப்பர் ஸ்பிலென்டர் மோட்டார்சைக்கிளில் ஹீரோ நிறுவனத்தின் ஐ3எஸ் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கிறது.



ஹீரோ ஸ்பிலென்டர் பி.எஸ்.6 மாடல்களில் புதிய டைமண்ட் ஃபிரேம் சேசிஸ், ரீவொர்க் செய்யப்பட்ட சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இது வாகனத்தை ஓட்டுபவருக்கு சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகள் அல்லது முன்புறம் 240 எம்.எம். டிஸ்க் மற்றும் பின்புறம் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிளில் காம்பி பிரேக் சிஸ்டம் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிலென்டர் பி.எஸ்.6 மாடல்கள்- கேண்டி பிளேசிங் ரெட், கிளேஸ் பிளாக், ஹெவி கிரே மற்றும் புதிதாக மெட்டாலிக் நெக்சஸ் புளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

ஹீரோ சூப்பர் ஸ்பிலென்டர் பி.எஸ். 6 மாடல்கள் புஷ் ஸ்டார்ட் பட்டன், டிரம் பிரேக் அலாய் வீல்கள் கொண்ட வேரியண்ட் மற்றொன்று புஷ் ஸ்டார்ட் பட்டன், முன்புறம் டிஸ்க் பிரேக் மற்றும் அலாய் வீல்கள் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 70,800 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News