ஆட்டோமொபைல்
பஜாஜ் டாமினர்

இந்தியாவில் பி.எஸ்.6 பஜாஜ் டாமினர் முன்பதிவு துவங்கியது

Published On 2020-02-25 08:34 GMT   |   Update On 2020-02-25 08:34 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் முன்பதிவுகள் துவங்கியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் பி.எஸ்.6 டாமினர் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் புதிய பி.எஸ்.6 டாமினர் மோட்டார்சைக்கிளினை ரூ. 5000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்னதாக வெளியான தகவல்களின் படி பி.எஸ்.6 பஜாஜ் டாமினர் விலை ரூ. 1,91,751 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது முந்தைய பி.எஸ்.4 மாடலின் விலையை விட ரூ. 1750 அதிகம் ஆகும்.



புதிய டாமினர் 400 மாடல் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகளவு மேம்படுத்தப்பட்டு புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்டது. அந்த வகையில் டாமினர் 400 மாடலில் DOHC ரக என்ஜின், ஸ்ப்லிட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டாட் மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே மற்றும் இன்வெர்ட்டெட் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கள் வழங்கப்பட்டன.

பி.எஸ்.6 டாமினர் 400 மாடலின் மெக்கானிக்கல் மாற்றங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும், இது பி.எஸ்.4 மாடலில் இருப்பதை போன்ற என்ஜினே வழங்கப்படலாம். தற்சமயம் விற்பனையாகும் பி.எஸ்.4 டாமினர் 400 மாடலில் 40 பி.எஸ். @8650 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும் 373.2சிசி, லிக்விட் கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர பஜாஜ் நிறுவனம் டாமினர் பட்ஜெட் ரக மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாடலில் சற்றே மெல்லிய டையர்கள், பட்ஜெட் ரக ஸ்விங் ஆம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது.
Tags:    

Similar News