ஆட்டோமொபைல்
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125சிசி

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125சிசி பி.எஸ்.6, ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-02-20 08:08 GMT   |   Update On 2020-02-20 08:08 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் 125 சிசி ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் பி.எஸ்.6 ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.



ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 பி.எஸ்.6 ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. புதிய ஸ்கூட்டரில் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புதிய ஸ்கூட்டரில் எவ்வித காஸ்மெடிக் அல்லது வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்படவில்லை.

ஸ்கூட்டர் கூர்மையான வடிவமைப்பில் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. பி.எஸ்.6 மேஸ்ட்ரோ எட்ஜ் மாடலின் வெளிப்புறம் ஃபியூயல் ஃபில்லர் கேப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சைடு ஸ்டான்டு, சர்வீஸ் இன்டிகேட்டர் விவரங்களை காண்பிக்கும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

மேஸ்ட்ரோ எட்ஜ் 125 பி.எஸ்.6 ஸ்கூட்டரில் ஐ3எஸ்- ஹீரோ ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம், ஸ்கூட்டர் இருக்கையின் கீழ் யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் ஸ்கூட்டரில் பயணிக்கும் போதே ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.



இந்த ஸ்கூட்டரில் பி.எஸ்.6 ரக 124.6சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9 பி.ஹெச்.பி. பவர், 10.4 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பி.எஸ்.4 மாடல் 9.1 பி.ஹெச்.பி. பவர், 10.2 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 பி.எஸ்.6 மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. முதல் வேரியண்ட் அலாய் வீல்கள் மற்றும் டிரம் பிரேக் விலை ரூ. 67,950, இரண்டாவது வேரியண்ட் அலாய் வீல் மற்றும் டிஸ்க் பிரேக் விலை ரூ. 70,150 மற்றும் மூன்றாவது வேரியண்ட் அலாய் வீல், டிஸ்க் பிரேக் மற்றும் பிரத்யேக நிற வேரியண்ட் விலை ரூ. 70,650 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 பி.எஸ்.6 ஸ்கூட்டர் டி.வி.எஸ். என்டார்க் 125, சுசுகி அக்சஸ் 125, யமஹா ரே இசட்.ஆர். 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News