ஆட்டோமொபைல்
ஹீரோ மோட்டோகார்ப்

கொரோனா வைரஸ் காரணமாக ஹீரோ மோட்டோகார்ப் உற்பத்தியில் பாதிப்பு

Published On 2020-02-17 07:05 GMT   |   Update On 2020-02-17 07:05 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன வாகனங்களின் உதிரிபாகங்கள் உற்பத்தி கொரோனா வைரஸ் காரணமாக சரிவடைந்து இருக்கிறது.



ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உதிரிபாகங்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி மாதத்திற்கு திட்டமிட்ட உற்பத்தியில் 10 சதவிதம் வரை குறையலாம் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டாலும், விநியோகத்தில் எவ்வித சரிவும் ஏற்படாது என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. சீன ஆலையில் உள்ள நிலவரத்தை ஆய்வு செய்து, எதிர்கால நடவடிக்கைகள் பற்றி திட்டமிடப்பட்டு வருவதாக ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019-20 நிதியாண்டில் ஹீரோ நிறுவனம் மொத்தம் 52,15,413 யூனிட்களை உற்பத்தி செய்திருக்கிறது.

இதுதவிர ஹீரோ நிறுவனம் டெஸ்டினி 125, மேஸ்ட்ரோ எட்ஜ் 125, ஸ்பிளென்டர் பிளஸ் மாடல்களை பி.எஸ்.6 தரத்திற்கு ஏற்ப அப்டேட் செய்து வருகிறது. இத்துடன் கரிஸ்மா மற்றும் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மாடல்களின் விற்பனையை நிறுத்தியது. மோசமான  விற்பனை காரணமாக இருமாடல்களும் திரும்பப் பெறப்பட்டதாக தெரிகிறது.
Tags:    

Similar News