ஆட்டோமொபைல்
பஜாஜ் பல்சர் என்.எஸ்.200 பி.எஸ்.6

இந்தியாவில் பல்சர் என்.எஸ்.200 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Published On 2020-02-15 06:54 GMT   |   Update On 2020-02-15 06:54 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் என்.எஸ்.200 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.



பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் புதிய பல்சர் என்.எஸ்.200 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்சர் என்.எஸ்.200 பி.எஸ்.6 முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ. 5000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டார்சைக்கிள் விநியோகத்தை அடுத்த சில வாரங்களில் துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. 2014-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் என்.எஸ்.200 மாடலில் அவ்வப்போது சிறுசிறு மாற்றங்களை பஜாஜ் நிறுவனம் செய்து வந்தது.

முன்னதாக இந்த மோட்டார்சைக்கிளில் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம், மேம்பட்ட கேட்டலிக் கன்வெர்ட்டர் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டது. 



தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலில் 199.5சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் பி.எஸ்.4 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 23 பி.ஹெச்.பி. பவர், 18.3 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய பி.எஸ்.6 என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

பஜாஜ் பல்சர் என்.எஸ்.200 மாடலின் அம்சம் மற்றும் வடிவமைப்பில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. புதிய வெர்ஷன் பல்வேறு புதிய நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் விற்பனையாகும் என்.எஸ்.200 விலை ரூ. 1.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய பி.எஸ்.6 வெர்ஷனின் விலை ரூ. 10,000 வரை அதிகம் ஆகும். இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் என்.எஸ்.200 பி.எஸ்.6 டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி, கே.டி.எம். டியூக் 200 மற்றும் யமஹா எஃப்.இசட். 25 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
Tags:    

Similar News