ஆட்டோமொபைல்
கே.டி.எம். டியூக் 200 பி.எஸ்.6

கே.டி.எம். டியூக் மற்றும் ஆர்.சி. பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்

Published On 2020-02-01 07:29 GMT   |   Update On 2020-02-01 07:29 GMT
கே.டி.எம். நிறுவனம் இந்திய சந்தையில் டியூக் மற்றும் ஆர்.சி. பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது.



ஆஸ்த்ரியாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான கே.டி.எம். இந்திய சந்தையில் பி.எஸ்.6 ரக டியூக் மற்றும் ஆர்.சி. மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது. புதிய மாடல்களின் விலை முந்தைய பி.எஸ்.4 மாடலை விட ரூ. 3300 மற்றும் ரூ. 10,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2020 கே.டி.எம். டியூக் 200 மாடல் சூப்பர் டியூக் 1290 ஆர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் புதிய லைட்வெயிட் ஸ்ப்லிட் டிரெலிஸ் ஃபிரேம், புதிய ஃபியூயல் டேன்க் மற்றும் புதிய தோற்றம் பெற்று இருக்கிறது. டியூக் 200 மாடலில் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் எலெக்டிரானிக், டபுள்யூ.பி. சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.



2020 கே.டி.எம். டியூக் 200 மற்றும் ஆர்.சி. 200 மாடல்களில் அல்ட்ரா காம்பேக்ட், லிக்விட் கூல்டு, DOHC, 4 வால்வ் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 24.6 பி.ஹெச்.பி. பவர், 19.3 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

இவற்றின் விலை முறையே ரூ. 1,72,749 மற்றும் ரூ. 1,96,768 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டியூக் 390 மற்றும் ஆர்.சி. 390 மாடலில் 373.3சிசி சிங்கிள் சிலிண்டர், 4 வால்வ் கொண்ட லிக்விட் கூல்டு DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 43 பி.ஹெச்.பி. பவர், 37 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.



2020 கே.டி.எம். டியூக் 390 மற்றும் ஆர்.சி. 390 மாடல்களின் விலை முறையே ரூ. 2,52,928 மற்றும் ரூ. 2,48,075 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கே.டி.எம். டியூக் 125 மற்றும் ஆர்.சி. 125 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை முறையே ரூ. 1,38,041 மற்றும் ரூ. 1,55,227 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கே.டி.எம். டியூக் 250 பி.எஸ்.6 மாடலில் 248.8சிசி சிங்கிள் சிலிண்டர், நான்கு வால்வ் கொண்ட லிக்விட் கூல்டு DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 29.5 பி.ஹெச்.பி. பவர், 24 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 2,00,576 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News