ஆட்டோமொபைல்
பிளாட்டினா பி.எஸ்.6

இந்தியாவில் பஜாஜ் சி.டி.100 மற்றும் பிளாட்டினா பி.எஸ்.6 மாடல்கள் வெளியீடு

Published On 2020-01-30 07:51 GMT   |   Update On 2020-01-30 07:51 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சி.டி.100 மற்றும் பிளாட்டினா பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன.



பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சி.டி.100 பி.எஸ்.6 மற்றும் பிளாட்டினா பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டன. இவற்றின் விலை முறையே ரூ. 40,794 மற்றும் ரூ. 47,264 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளன. இவை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. புதிய பிரத்யேக ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் மோட்டார்சைக்கிள் என்ஜினை சீராக இயக்கி, எரிபொருள் பயன்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது.



புதிய எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தை பராமரிப்பது எளிமையாக இருக்கும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய பஜாஜ் சி.டி.100 பி.எஸ்.6 மாடலில் 100 சிசி மற்றும் 110சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

புதிய சி.டி.110 மாடலில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், புதிய கடாக் அம்சம் வழங்கப்பட்டுள்ளது இதனை பஜாஜ் பேஷ் பிளேட் என அழைக்கிறது. சி.டி. பி.எஸ்.6 ரக மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை ரூ. 40,794 (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்குவதால், நாட்டில் தற்சமயம் கிடைக்கும் குறைந்த விலை பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள்களாக இவை இருக்கின்றன.

பஜாஜ் பிளாட்டினா பி.எஸ்.6 மாடல்களும் பிளாட்டினா 100 மற்றும் பிளாட்டினா 110 ஹெச் கியர் என இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 47,264 மற்றும் ரூ. 54,797 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News