ஆட்டோ டிப்ஸ்

இணையத்தில் வெளியான ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்கள்

Published On 2022-09-29 11:09 GMT   |   Update On 2022-09-29 11:09 GMT
  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • புதிய விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய புது விவரங்களை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டு உள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அக்டோபர் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீட்டை உணர்த்தும் டீசர்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் டீசரில் விடா எலெகெட்ரிக் ஸ்கூட்டர் போர்டபில் பேட்டரிகளை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

அந்த வகையில், இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த ஸ்கூட்டர் மாடல் சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்திய சந்தையில் பிரீமியம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிரிவில் ஏத்தர், டிவிஎஸ், ரெவோல்ட் மற்றும் பஜாஜ் என குறைந்த நிறுவனங்களே வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தாய்வானை சேர்ந்த கோகோரோ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. கோகோரோ நிறுவனம் பேட்டரி மாற்றும் வசதியை தாய்வானில் வழங்கி வருகிறது. அந்த வகையில், தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கோகோரோ பேட்டரி மாற்றும் வசதியை பெற ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டு இருக்கிறது. பேட்டரியை கழற்றும் வசதி இருப்பதால், பயனர்கள் இவற்றை வீடுகளிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இதுதவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணைந்து பாஸ்ட் சார்ஜிங் மற்றும் பேட்டரி மாற்றும் மையங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நகர பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படுகிறது. மேலும் இதன் விலை ரூ. 1 லட்சம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News