ஆட்டோ டிப்ஸ்
போக்ஸ்வேகன்

கார்களில் அதிநவீன தொழில்நுட்பம் - மைக்ரோசாப்ட் உடன் கூட்டணி அமைத்த போக்ஸ்வேகன்

Update: 2022-05-07 10:47 GMT
போக்ஸ்வேகன் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளன. எதற்கான கூட்டணி என்ற விவரங்களை பார்ப்போம்.


போக்ஸ்வேகன் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இணைந்து ஆக்மெண்டெட் ரியாலிட்டி கிளாஸ்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இதை கொண்டு ஓட்டுனர்கள் ஹாலோகிராபிக் டிஸ்ப்ளேக்களில் போக்குவரத்து நெரிசல் பற்றிய விவரங்கள், பரிந்துரைகள், வானிலை நிலவரங்கள் என ஏராளமான தகவல்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். 

பயணங்களின் போது கார்களில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹாலோ லென்ஸ் 2 ஹெட்செட்-ஐ இயங்க வைக்க போக்ஸ்வேகரன் நிறுவனம் மைக்ரோசாப்ட் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. எதிர்கால போக்குவரத்துக்களில் ஆக்மெண்டெட் ரியாலிட்டி மிக முக்கிய பங்கு வகிக்கும் என போக்ஸ்வேகன் தெரிவித்து உள்ளது.2015 ஆம் ஆண்டிலேயே போக்ஸ்வேகன் நிறுவனம் தனது ரேஸ் டிரெயினர் கொல்ப் ஆர் மாடலில் ஹாலோ லென்ஸ்-ஐ பயன்படுத்த விருப்பம் தெரிவித்து இருந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. வாகனத்தில் ஹெட்செட்டை பொருத்தும் போது  சென்சார்கள் டிராக்கிங் திறனை இழந்து, ஹாலோகிராம்கள் மறைந்து விட்டன. 

இதை அடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை போக்ஸ்வேகன் அணுகியது. பின் 2018 ஆண்டு முதல் இரு நிறுவனங்கள் இணைந்து இதற்கான தீர்வை காணும் முயற்சியில் ஈடுபட துவங்கி உள்ளன. 

Tags:    

Similar News