ஆட்டோ டிப்ஸ்
ஹோண்டா கார்

கார் மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி அறிவித்த ஹோண்டா கார்ஸ்

Update: 2022-05-03 11:34 GMT
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் மே மாதத்திற்கான சலுகை மற்றும் தள்ளுபடி விவரங்களை வெளியிட்டு உள்ளது. இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதன் மூலம் கார் விற்பனையை அதிகப்படுத்த ஹோண்டா கார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. அந்த வகையில் மே மாதத்திற்கான சலுகையில் கார் மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ. 33 ஆயிரத்து 158 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

சலுகை மற்றும் தள்ளுபடிகள் கார் மாடல்களின் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும். மேலும் இந்த சலுகைகள் மே 31, 2022 அல்லது ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும். 

ஹோண்டா அமேஸ் மாடலுக்கு குறைந்த பட்சமாக ரூ. 9 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் மற்றும் ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும். இந்த காருக்கு எக்சேன்ஜ் சலுகை எதுவும் வழங்கப்படவில்லை.

ஹோண்டா சிட்டி நான்காவகது தலைமுறை மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ. 8 ஆயிரம் வழங்கப்படுகிறது.ஹோண்டா WR V மாடலுக்கு ரூ. 26 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.

ஹோண்டா சிட்டி ஐந்தாம் தலைமுறை மாடலுக்கு ரூ. 30 ஆயிரத்து 396 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, ரூ. 5 ஆயிரத்து 396 மதிப்பிலான இலவச அக்சஸரீக்கள், ரூ. 5 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஸ் போனஸ், ரூ. 8 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி  உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 33 ஆயிரத்து 158 வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 10 ஆயிரம் உடனடி தள்ளுபடி,ஸ ரூ. 12 ஆயிரத்து 158 மத்ப்லிபலான இலவச அக்சஸரீக்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 5 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் மற்றும் ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News