ஆட்டோ டிப்ஸ்
டாடா பன்ச்

டாடா பன்ச் இந்திய விலையில் மீண்டும் மாற்றம் - புதிய விலை எவ்வளவு தெரியுமா?

Update: 2022-05-02 10:45 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டாடா பன்ச் மாடல் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா பன்ச் மாடல் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. அதன்படி டாடா பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் விலை தற்போது ரூ. 5 லட்சத்து 82 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. தற்போதைய அறிவிப்பின் படி டாடா பன்ச் பேஸ் மாடல் விலை ரூ. 15 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. 

இந்த முறை டாடா பன்ச் மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விலை உயர்த்தப்படவில்லை. விலை உயர்வின் படி டாடா பன்ச் மேனுவல் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 82 ஆயிரத்து 900 என துவங்கு அதிகபட்சம் ரூ. 8 லட்சத்து 88 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. டாடா பன்ச் ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 24 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9 லட்சத்து 48 ஆயிரத்து 900  என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.அம்சங்களை பொருத்தவரை புதிய டாடா பன்ச் மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்., பாக் லைட்கள், ரூப் ரெயில்கள், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன. 

டாடா பன்ச் மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 84 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News