ஆட்டோ டிப்ஸ்
ஓலா ஸ்கூட்டர்

ஓலா ஸ்கூட்டரை இழுத்து செல்லும் கழுதை - வைரலாகும் புகைப்படங்கள்!

Published On 2022-04-26 17:07 IST   |   Update On 2022-04-26 17:07:00 IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் நபர் ஒருவர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழுதையை கட்டி ஊர்வலம் செல்லும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிய சில நாட்களிலேயே ஷட் டவுன் ஆனதை அடுத்து, அந்நிறுவனம் கொடுத்த பதில் திருப்திகரமாக இல்லை என கூறி மகாராஷ்டிரா மாநிலத்தில் வாடிக்கையாளர் வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டார். 

மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தை சேர்ந்த சச்சின் கீட் என்ற நபர் தனது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழுதையை கட்டி இழுத்து சென்றுள்ளார். மேலும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை நம்ப வேண்டாம் என்று கூறும் பதாகைகளையும் வைத்திருந்தார். ஸ்கூட்டரை கழுதை இழுத்து செல்லும் காட்சிகள் அடங்கிய புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



ஸ்கூட்டர் வாங்கிய முதல் ஆறு நாட்களுக்கு மட்டும் அது சீராக வேலை செய்தது என அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். மேலும் ஸ்கூட்டர் பற்றி புகார் அளித்ததற்கு ஓலா தரப்பில் யாரும் வந்து அதனை சரி செய்து கொடுக்கவில்லை என இவர் குற்றம்சாட்டி இருக்கிறார். கஸ்டமர் சேவை அதிகாரிக்கு பல முறை தொடர்பு கொண்டும், எந்த பலனும் கிடைக்கவில்லை.

இதை அடுத்து விரக்தியில் இந்த நபர் இவ்வாறு செய்தி இருக்கிறார். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை நம்ப வேண்டாம் என்றும் ஓலா இருசக்கர வாகனங்களை வாங்க வேண்டாம் என கூறும் பதாகைகளை அவர் தனது ஸ்கூட்டர் மற்றும் கழுதையின் மேல் வைத்துக் கொண்டு ஊர்வலம் வந்தார். 

Similar News