ஆட்டோ டிப்ஸ்
டாடா கார்

கார்களின் விலையில் திடீர் மாற்றம் - பயனர்களுக்கு ஷாக் கொடுத்த டாடா மோட்டார்ஸ்

Published On 2022-04-24 05:45 GMT   |   Update On 2022-04-23 11:34 GMT
புது விலை உயர்வின் படி டாடா நிறுவன கார் மாடல்கள் விலை 1.1 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.


இந்திய சந்தையில் மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வரிசையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகன கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. 

அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன மாடல்கள் விலை நேற்று (ஏப்ரல் 23) அமலுக்கு வந்தது. மற்ற நிறுவனங்களை போன்றே டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதை விலை உயர்வுக்கான காரணமாக தெரிவித்து இருக்கிறது. புது விலை உயர்வின் படி டாடா நிறுவன கார் மாடல்கள் விலை 1.1 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.



புதிய விலை விவரங்கள்:

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடலான டாடா டியாகோ விலை ரூ. 5 லட்சத்து 22 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 67 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

காம்பேக்ஸ் எஸ்.யு.வலி. மாடலான டாடா பன்ச் விலை ரூ. 5 லட்சத்து 67 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 48 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 

டாடா டிகோர் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 82 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 44 ஆயிரம் என மாறி இருக்கிறது. டாடா டிகோர் EV மாடல் விலை ரூ. 12 லட்சத்து 24 ஆயிரம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 39 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பிரீமியம் ஹேச்பேக் கார் டாடா அல்ட்ரோஸ் மாடல் விலை ரூ. 6 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 10 லட்சம் என மாறி இருக்கிறது. டாடா நெக்சான் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 42 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 73 ஆயிரம் என அதிகரித்துள்ளது. டாடா நெக்சான் EV மாடல் விலை ரூ. 14 லட்சத்து 54 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 15 ஆயிரம் என மாறி இருக்கிறது.

டாடா ஹேரியர் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 52 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21 லட்சத்து 81 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டாடா சஃபாரி மாடல் விலை ரூ. 15 லட்சத்து 02 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 23 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.

இந்த விலை உயர்வு கார் மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப வேறுபடும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News