ஆட்டோ டிப்ஸ்
பியூர் EV

2 ஆயிரம் இ ஸ்கூட்டர்களை அவசர அவசரமாக ரி-கால் செய்யும் பியூர் EV - எதற்கு தெரியுமா?

Published On 2022-04-22 11:00 GMT   |   Update On 2022-04-22 11:00 GMT
தெலுங்கானாவில் இ ஸ்கூட்டர் வெடித்து சிதறியதை அடுத்து பியூர் EV நிறுவனம் தனது வாகனங்களை ரீகால் செய்வதாக அறிவித்து உள்ளது.


ஐதராபாத் நகரை சேர்ந்த பியூர் EV நிறுவனம் தனது இ-டிரான்ஸ் பிளஸ் மற்றும் இ-புளூடோ 7ஜி ஸ்கூட்டர் மாடல்களில் 2 ஆயிரம் யூனிட்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக தெலுங்கானா மாநிலத்தில் பியூர் EV நிறுவன ஸ்கூட்டர் மாடல் வெடித்து சிதறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 



சில தினங்களுக்கு முன் பியூர் EV ஸ்கூட்டர் மாடலை சார்ஜ் செய்த போது திடீரென வெடித்து சிதறியதை அடுத்து 80 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து இ ஸ்கூட்டர்களை ரி-கால் செய்து பேட்டரி ஆரோக்கியத்தை முழுமையாக ஆய்வு செய்ய இருப்பதாக பியூர் EV நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

"பேட்டரியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து, ஏதேனும் பிர்ச்சினைகள் இருந்தால் அதனை சரி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்," என பியூர் EV நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News