வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் 2021 ஆண்டு வாகனங்கள் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது.
வாகனங்கள் விற்பனையில் 27 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்த வால்வோ
பதிவு: ஜனவரி 08, 2022 16:08 IST
வால்வோ கார்
வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு வாகனங்கள் விற்பனையில் 27 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் 1,724 யூனிட்களை விற்பனை செய்தது. அதற்கும் முந்தைய ஆண்டு வால்வோ நிறுவனம் 1361 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.
மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலான எக்ஸ்.சி.60, வால்வோ விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலான எக்ஸ்.சி.40 அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு முதல் வால்வோ நிறுவனம் இந்தியாவில் பெட்ரோல் கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. டீசல் என்ஜின் மாடல்களுக்கு மாற்றாக எஸ்90, எக்ஸ்.சி.60 மற்றும் எக்ஸ்.சி.90 பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் கார்களை வால்வோ அறிமுகம் செய்தது.