ஆட்டோ டிப்ஸ்
எலான் மஸ்க்

ஒரு மணி நேரத்திற்கு 140 கோடி டாலர்கள் ஈட்டிய எலான் மஸ்க்

Update: 2022-01-04 09:38 GMT
டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் வருவாய் விவரங்கள் வெளியாகி உள்ளது.


உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் 2021 ஆண்டு முதலிடம் பிடித்தார். எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் டெஸ்லாவின் அசுர வளர்ச்சி காரணமாக எலான் மஸ்க் வருவாய் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜனவரி 3, 2022) மட்டும் டெஸ்லா நிறுவன பங்குகள் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்தன.

டெஸ்லா நிறுவன பங்குகள் 13.5 சதவீதம் அதிகரித்து ஒரு பங்கின் விலை 1,199.78 டாலர்களாக அதிகரித்தது. டெஸ்லா பங்குகளில் 18 சதவீதத்தை எலான் மஸ்க் வைத்திருக்கிறார். கடந்த மாதம் டெஸ்லா நிறுவன மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர்களாக அதிகரித்தது.2021 ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் கார் மாடல்கள் வினியோகம் இருமடங்கு அதிகரித்தது. கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் மட்டும் டெஸ்லா நிறுவனம் 3 லட்சம் யூனிட்களை வினியோகம் செய்தது. டெஸ்லாவின் மாடல் 3 மற்றும் மாடல் வை அதிக பிரபலமான மாடல்களாக இருந்துள்ளன.
Tags:    

Similar News