ஆட்டோ டிப்ஸ்
வால்வோ கார்

கார் மாடல்கள் விலையை உயர்த்தும் வால்வோ

Update: 2022-01-01 08:37 GMT
வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.


ஸ்வீடன் நாட்டு கார் உற்பத்தியாளரான வால்வோ தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி கார் மாடல்கள் விலை ரூ. 1 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 3 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

அந்நிய செலாவணி நிலையற்ற தன்மை, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் குறைபாடு போன்ற காரணங்களால் கார் மாடல்கள் விலை உயர்த்தப்படுவதாக வால்வோ அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு இன்று (ஜனவரி 1, 2022) அமலுக்கு வந்தது. புதிய விலை விவரங்கள்

வால்வோ எக்ஸ்.சி.40 டி4 ஆர் டிசைன் பெட்ரோல் ரூ. 43.25 லட்சம்

வால்வோ எக்ஸ்.சி.60 பி5 இன்ஸ்க்ரிப்ஷன் பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் ரூ. 63.50 லட்சம்

வால்வோ எஸ்90 பி5 இன்ஸ்க்ரிப்ஷன் பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் ரூ. 64.90 லட்சம்

வால்வோ எக்ஸ்.சி.90 பி6 இன்ஸ்க்ரிப்ஷன் பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் விலை ரூ. 90.90 லட்சம்

முன்னதாக வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது டீசல் மாடல்களின் விற்பனையை நிறுத்தியது. தற்போதைய விலை உயர்வில் வால்வோ எஸ்60 செடான், பிளக்-இன் ஹைப்ரிட் எக்ஸ்.சி.90 டி8 போன்ற மாடல்கள் பாதிக்கப்படவில்லை.
Tags:    

Similar News