ஆட்டோ டிப்ஸ்
ஆனந்த் மஹிந்திரா

டைம்லைனில் வந்த வீடியோ - ஊனமுற்றவருக்கு உடனடி உதவி செய்த ஆனந்த் மஹிந்திரா

Update: 2021-12-29 11:28 GMT
சமூக வலைதளத்தில் உடல் ஊனமுற்றவரின் வீடியோ பார்த்து, உடனடியாக அவருக்கு உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


இரு கை மற்றும் கால்கள் இல்லாத நபர், மாடிஃபை செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனத்தை மிக நேர்த்தியாக இயக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. வைரல் வீடியோவை தனது டைம்லைனில் பார்த்த ஆனந்த் மஹிந்திரா ஊனமுற்றவரின் திறமையை பார்த்து வியந்துள்ளார். 

மேலும் அவரின் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை பாராட்டி அவருக்கு வேலை வழங்குவதாக ஆனந்த் மஹிந்திரா உறுதியளித்துள்ளார். இதுபற்றிய தகவலை ஆனந்த் மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.'இதனை இன்று எனது டைம்லைனில் பார்த்தேன். இது எவ்வளவு பழையது என்றோ, எங்கிருந்து வந்ததோ என தெரியாது. ஆனால் இந்த நபரின் செயலால் பூரித்துப் போனேன்,' என தெரிவித்துள்ளார். மேலும் தனது நிறுவன அதிகாரியிடம் இவருக்கு தகுந்த வேலை வழங்கவும் உத்தரவிட்டார். 

இவரது டுவிட்டர் பதிவுக்கு பதில் அளித்த மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், 'இவரை தேடி வருகிறோம். இவர் நமக்கு மிகவும் பயனுள்ள சொத்து. உண்மையான சூப்பர்ஹீரோ,' என பதில் அளித்தது. 

Tags:    

Similar News