ஆட்டோ டிப்ஸ்
வால்வோ எக்ஸ்.சி.90

புதிய பெயரில் உருவாகும் வால்வோ எலெக்ட்ரிக் கார்

Update: 2021-12-13 11:26 GMT
வால்வோ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.


எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அதிக கவனம் செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக வால்வோ இருக்கிறது. வால்வோ நிறுவனம் தனது எக்ஸ்.சி.90 மாடலின் மேம்பட்ட வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புதிய பிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலின் பெயரை மாற்ற வால்வோ திட்டமிட்டுள்ளதாக வால்வோ கார்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஹக்கன் சாமுவேல்சன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். முன்னதாக வால்வோ நிறுவனம் எம்ப்ளா எனும் பெயரை தனது கார் மாடலுக்கு பயன்படுத்த காப்புரிமை கோரி விண்ணப்பத்து இருந்தது. அந்த வகையில் வால்வோ நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் மாடல் எம்ப்ளா என அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த மாடலின் இருக்கை உயரமாக இருக்கும். இதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படும். மேலும் இந்த காரின் பவர்டிரெயின் போல்ஸ்டார் 3 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News