ஆட்டோமொபைல்
மாருதி பலேனோ

என்கேப் சோதனையில் சறுக்கிய மாருதி பலேனோ

Published On 2021-10-29 14:03 GMT   |   Update On 2021-10-29 14:03 GMT
மாருதி சுசுகியின் பலேனோ ஹேட்ச்பேக் மாடல் லத்தீன் என்கேப் சோதனையில் பெற்ற புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.


இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மாருதி சுசுகி பலேனோ மாடல் லத்தீன் என்கேப் சோதனையில் ஒரு நட்சத்திர குறியீடையும் பெறவில்லை. இந்த காம்பேக்ட் ஹேட்ச்பேக் மாடல் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் பயணிக்கும் போது முறையே 20.03 சதவீதமும், 17.06 சதவீத புள்ளிகளையே பெற்றது. 

சமீபத்தில் லத்தீன் என்கேப் தனது பரிசோதனை விதிகளை மாற்றி அமைத்தது. இதனால், இந்த சோதனையில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினமாகி இருக்கிறது. புதிய விதிகள் குளோபல் என்கேப் பின்பற்றும் விதிமுறைகளை விட கடுமையானவை ஆகும்.



பாதுகாப்பை பொருத்தவரை மாருதி பலேனோ மாடல் முன்புற ஏர்பேக் மட்டுமே கொண்டிருக்கிறது. பின்புறம் பெல்ட் லோட் லிமிட்டர் மற்றும் பெல்ட் பிரீ-டென்சனர் ஸ்டாண்டர்டு அம்சங்களாக வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சோதனையில் ஓட்டுனரின் தலை மற்றும் கழுத்து பகுதிகளுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்கி இருக்கிறது. 

லத்தீன் என்கேப் சோதனையில் பங்கேற்ற மாருதி பலேனோ மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதில்லை. எனினும், இந்த கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
Tags:    

Similar News