ஆட்டோமொபைல்
கோப்புப்படம்

மழைக்கால வாகன பராமரிப்பில் கவனம் அவசியம்

Published On 2021-10-29 18:51 IST   |   Update On 2021-10-29 18:51:00 IST
மழைக்காலத்தில் வாகனம் பழுதாகாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் அதனை அவ்வப்போது பராமரிப்பது அவசியம் ஆகும். வாகனங்களை சரியான காலஇடைவெளியில் பராமரித்தால் தான் வாகனம் சீராக இயங்கும். வாகன பராமரித்தல் மற்றும் மழைக்காலத்தில் வாகன பராமரிப்பின் போது கவனிக்க வேண்டியவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

மழைக்காலத்தில் வாகனத்தில் அதிக அளவு மண் சேரும் வாய்ப்பு உள்ளது. இதை கவனிக்க தவறினால் வண்டியில் துரு ஏறும். எனவே இதை தவிர்க்க மட்கார்டின் உள்பக்கம் பெயிண்ட் அடிக்க வேண்டும்.



மழை நேரத்தில் வெளியே சென்று வந்தவுடன் தண்ணீரால் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். பின்பு துணியால் துடைக்க வேண்டும். வண்டியை மழை தண்ணீர் விழாத இடங்களில் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும். மழை காலம் முடிந்ததும் வண்டியை சர்வீஸ் செய்ய வேண்டும்.

செயின் லூப்ரிகேசன் செய்யப்பட வேண்டும். அனைத்து கேபிள்களும் சுத்தம் செய்யப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் கிரீஸ், ஆயில் இட வேண்டும். 10 நாட்களுக்கு மேல் வெளியூர் செல்வதாக இருந்தாலும் வண்டியை உபயோகப்படுத்தாமல் இருக்கும் நிலை ஏற்படும் போது வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். பெட்ரோலை மூட வேண்டும். 

மேலும் என்ஜினை ஓட விட்டு கார்ப்பரேட்டரை காலி செய்ய வேண்டும். டயர்கள் இரண்டும் தரையை தொடாத நிலையில் வண்டியை நிறுத்த வேண்டும். கேன்வாஸ் கொண்டு வண்டியை முழுவதுமாக மூடி வைக்க வேண்டும். மீண்டும் வண்டியை உபயோகத்துக்கு எடுக்கும் போது உடனே ஓட்டி செல்லக்கூடாது. வண்டியை ஸ்டார்ட் செய்து 10 நிமிடம் ஐடில் நிலையில் ஓட விட வேண்டும்.

Similar News