ஆட்டோமொபைல்
டாடா பவர்

18 மாதங்களில் ரூ. 7500 கோடி முதலீடு செய்யும் டாடா

Published On 2021-10-27 13:56 GMT   |   Update On 2021-10-27 13:56 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பெரும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.


டாடா பவர் நிறுவனம் நாடு முழுக்க ஆயிரம் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை நிறுவி இருக்கிறது. இத்துடன் நாடு முழுக்க சுமார் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் பாயிண்ட்களை நிறுவி இருக்கிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு கணிசமான அளவு அதிகரிக்கும்.

நாடு முழுக்க 180 நகரங்களில் டாடா பவர் சார்ஜிங் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அலுவலகங்கள், மால்கள், ஓட்டல்கள், ரீடெயில் அவுட்லெட்கள், பொது இடங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் டாடா பவர் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 



இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் இ.வி. மற்றும் டிகோர் இ.வி. மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் அடுத்த 18 மாதங்களில் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் ரூ. 7,500 கோடி முதலீடு செய்ய இருக்கிறது.
Tags:    

Similar News