ஆட்டோமொபைல்
ஹோண்டா ஸ்கூட்டர்

அட்வென்ச்சர் ஸ்கூட்டர் உருவாக்கும் ஹோண்டா

Published On 2021-10-21 12:05 GMT   |   Update On 2021-10-21 12:05 GMT
ஹோண்டா நிறுவனம் புதிதாக உருவாக்கி வரும் ஸ்கூட்டர் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஹோண்டா நிறுவனம் 350சிசி அட்வென்ச்சர் ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்கூட்டர் ஹோண்டா ஏ.டி.வி.350 என அழைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதே பெயருக்கான காப்புரிமை கோரி ஹோண்டா நிறுவனம் விண்ணப்பித்து இருக்கிறது. 

ஹோண்டா அட்வென்ச்சர் ஸ்கூட்டர் பிரிவில் புதிய மாடலாக ஹோண்டா ஏ.டி.வி. இணைகிறது. தற்போது ஹோண்டா நிறுவனம் 745சிசி எக்ஸ்.ஏ.டி.வி. மற்றும் ஏ.டி.வி. 150 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.



ஐரோப்பாவில் ஏ.டி.வி.350 பெயரை பயன்படுத்த ஹோண்டா நிறுவனம் அனுமதி பெற்று இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் இணையத்தில் வலம்வருகின்றன. இந்த ஆவணங்களின்படி புதிய ஸ்கூட்டர் ஹோண்டா போர்சா 350 மேக்சி ஸ்கூட்டரை தழுவி உருவாகி இருக்கும் என தெரியவந்துள்ளது.

அதன்படி புதிய ஹோண்டா ஏ.டி.வி.350 ஸ்கூட்டரில் 330சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 29 பி.ஹெச்.பி. திறன் வழங்கும்.
Tags:    

Similar News