ஆட்டோமொபைல்
நிதின் கட்கரி

அங்கு உற்பத்தி செய்தால், இங்கு விற்பனை செய்யக்கூடாது - மத்திய மந்திரி அதிரடி

Published On 2021-10-09 16:10 IST   |   Update On 2021-10-09 16:10:00 IST
இந்தியாவுக்கு சி.பி.யு. முறையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.


டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார். மேலும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்யக்கூடாது என்றும் டெஸ்லா நிறுவனத்திடம் தெரிவித்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

'சீனாவில் உற்பத்தி செய்த எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்யக்கூடாது. எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து, இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்,' என அவர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.



மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கு டெஸ்லா எழுதியிருக்கும் கடிதத்தில் 'இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்பட வேண்டும். தற்போது சி.பி.யு. முறையில் இந்தியா கொண்டுவரப்படும் கார்களுக்கு 60 முதல் 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது,' என தெரிவித்துள்ளது.


Similar News