ஆட்டோமொபைல்
இ-பைக்-கோ

நாடு முழுக்க ஒரு லட்சம் சார்ஜிங் மையங்கள் - தனியார் நிறுவனம் அதிரடி

Update: 2021-10-01 09:20 GMT
இ-பைக்-கோ நிறுவனம் நாடு முழுக்க சுமார் ஒரு லட்சம் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது.


ஐ.ஓ.டி. எனப்படும் இண்டர்நெட் ஆப் திங்ஸ் சார்ந்து இயங்கும் சார்ஜிங் மையங்களை கட்டமைக்கும் பணிகளை துவங்க இ-பைக்-கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நாடு முழுக்க சுமார் ஒரு லட்சம் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சார்ஜிங் மையங்கள் இ-பைக்-கோ சார்ஜ் எனும் பெயரில் இயங்க இருக்கின்றன.

இ-பைக்-கோ நிறுவனம் நாட்டின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிளாட்பார்ம் ஆகும். குறைந்த விலையில் ஐ.ஓ.டி. சார்ந்த சார்ஜிங் மையங்களை உருவாக்க இருப்பதாக இ-பைக்-கோ தெரிவித்துள்ளது. இவற்றை பயனர்கள் ஸ்மார்ட்போன் செயலி மூலம் பயன்படுத்தலாம். வைபை வசதி இருப்பதால், சார்ஜிங் விவரங்களை மிக துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.புதிய ஐ.ஓ.டி. சார்ந்த சார்ஜிங் மையங்களை ஒவ்வொரு 500 மீட்டர்களில் கட்டமைக்க இ-பைக்-கோ திட்டமிட்டுள்ளது. மேலும் வாகனத்தில் முழு சார்ஜ் ஆனதும், சார்ஜிங் தானாக நிறுத்தப்பட்டு விடும். சார்ஜிங் செய்வதற்கான கட்டண முறைகளிலும் இ-பைக்-கோ ரீசார்ஜ் திட்டங்களை வழங்க இருக்கிறது.
Tags:    

Similar News