ஆட்டோமொபைல்
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஸ்கூட்டர் சர்வீஸ் செய்வதிலும் புதுமை காட்டும் ஓலா எலெக்ட்ரிக்

Published On 2021-09-25 11:03 GMT   |   Update On 2021-09-25 11:03 GMT
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் சர்வீஸ் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.


இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை துவங்கியது. விற்பனை துவங்கிய இரண்டே நாட்களில் ரூ. 1100 கோடி மதிப்பிலான ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டதாக ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்தது. 

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதிகாரப்பூர்வ விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் எதுவும் திறக்கப்படாத நிலையில், விற்பனைக்கு பிந்தைய சேவைகளை ஓலா எலெக்ட்ரிக் எப்படி செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓலா எஸ்1 சீரிஸ் மாடல்களின் விற்பனை, ஆன்லைன் முன்பதிவு மற்றும் டெலிவரி பற்றிய விவரங்களுடன் வழக்கமான சர்வீஸ் மற்றும் இதர சேவைகள் வாடிக்கையாளர்களின் வீட்டிலேயே செய்யப்படும் என ஓலா எலெக்ட்ரிக் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 



'ஓலா எஸ்1 / ஓலா எஸ்1 ப்ரோ மாடல்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் ஸ்மார்ட் வாகனங்கள் ஆகும். இவற்றை வழக்கமான வாகனங்களை போன்று 3-6 மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஸ்கூட்டரில் எதையேனும் மாற்ற வேண்டுமெனில் ஸ்கூட்டரே உங்களுக்கு தகவல் கொடுக்கும்.' 

'பின் ஓலா எலெக்ட்ரிக் செயலியில் அதனை தெரிவித்தால், ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் வீட்டிலேயே சரி செய்யப்படும். ஒருவேளை வீட்டில் இருந்தபடி சரிசெய்ய முடியாத சூழல் ஏற்பட்டால், வாகனம் கொண்டு செல்லப்பட்டு கோளாறு சரியானதும் வீட்டிற்கே கொண்டுவரப்படும்,' என ஓலா எலெக்ட்ரிக் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News